வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..
மனிதனின் கேடிலும் கெட்ட கேடு பொறாமைதான். மனிதன் பிறக்கையிலேயே தன்னை அழிப்பதற்காக தானே தன்னோடு கொண்டுவந்த மிகப்பெரிய விஷமெனில் அது பொறாமையுணர்வாகத் தானிருக்கும். வெற்றி புரிபடாத நிலையிலும், வெல்வதன் அவசியத்தை உணராமலும், தனது இயலாமையை சரிசெய்துக் கொள்ளமுடியாமல் தன்னைத்தானே கொன்றுவிட தனையறியாமலே தீர்மாணித்து தன்மீதே நெருப்பள்ளி போட்டுக்கொள்ளும் செயலே பிறர்மேல் பொறாமை கொள்ளும் செயலும்.
ஆனால் அந்தப் பொறாமையென்ன சும்மாவிடுமா? முதலில் பிறரை நோகடித்து, கடைசியில் தன்னையும் அழித்து, தனது சுற்றத்தையே ஒன்றுமில்லாதவாறு அழித்துவிட்டு வெறும் தோல்வி கரிந்துப்போன சாம்பளாகவோ அல்லது மனிதத்தை ஒழித்துவிட்ட ராட்சசப் பசியாகவோ மட்டுமே மிஞ்சிப்போகும்.
அத்தகைய பொறாமையால் அழிந்தோர் எண்ணற்றோர். அப்படி எரிந்துக் கருகிய மனதில் மரணம் முட்டி மிஞ்சியச் சாம்பலில்கூட பொறாமை நீருபூத்து சுடும் நெருப்பாகவே கனன்று பிறரின் நல்லெண்ணங்களைக்கூட எரிக்கத்தக்க கடுந் தீஞ்செயலாகவே மாறிவிடுகிறது.
அதேவேளை பொறாமையற்றோரைப் பாருங்களேன்; பொறாமையில்லா மனசு ஒரு பூஞ்சோலை மாதிரி. அங்கே அன்பின் காற்று சில்லென்று வீசும், பெருந்தன்மையின் கடலென அவரின் மனசு விரிந்திருக்கும், கேட்டதைக் கொடுக்க இயலாவிட்டாலும் அவரால் நினைத்ததை செய்து தரமுடிகிறது. அவருக்கென மரங்கள் தனியே அசைகின்றன. சுடும் சூரியன்கூட கொஞ்சம் ஒதுங்கி மேகத்துனுள் மறைந்துக்கொண்டு அத்தகையோரை சுடக்கூட அஞ்சுகிறது. தெளிந்த நீரோடையில் தெரியும் சிறுகல் மற்றும் மணலைப்போல, வெள்ளெந்தியாய், பார்ப்பவருக்க்கு அவரின் முகத்தைக் காட்டும் கண்ணாடியைப் போல சுத்தப்பட்டுவிடுகிறது பொறாமையில்லா மனசு.
உண்மையில் பொறாமையின்றி வாழ்வது எத்தனை இனிமை தெரியுமா? போகட்டுமே’ அவள்தானே…
View original post 885 more words