புகை பிடிப்பதால் நன்மைகள்????

எரிமலை

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை.  புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். . எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

1. பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.

2. நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.

3. நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.

4. சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.

5. சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.

6. சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.

View original post 340 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s