வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரை – 11 – பொறாமை)

வித்யாசாகரின் எழுத்துப் பயணம்

னிதனின் கேடிலும் கெட்ட கேடு பொறாமைதான். மனிதன் பிறக்கையிலேயே தன்னை அழிப்பதற்காக தானே தன்னோடு கொண்டுவந்த மிகப்பெரிய விஷமெனில் அது பொறாமையுணர்வாகத் தானிருக்கும். வெற்றி புரிபடாத நிலையிலும், வெல்வதன் அவசியத்தை உணராமலும், தனது இயலாமையை சரிசெய்துக் கொள்ளமுடியாமல் தன்னைத்தானே கொன்றுவிட தனையறியாமலே தீர்மாணித்து தன்மீதே நெருப்பள்ளி போட்டுக்கொள்ளும் செயலே பிறர்மேல் பொறாமை கொள்ளும் செயலும்.

ஆனால் அந்தப் பொறாமையென்ன சும்மாவிடுமா? முதலில் பிறரை நோகடித்து, கடைசியில் தன்னையும் அழித்து, தனது சுற்றத்தையே ஒன்றுமில்லாதவாறு அழித்துவிட்டு வெறும் தோல்வி கரிந்துப்போன சாம்பளாகவோ அல்லது மனிதத்தை ஒழித்துவிட்ட ராட்சசப் பசியாகவோ மட்டுமே மிஞ்சிப்போகும்.

அத்தகைய பொறாமையால் அழிந்தோர் எண்ணற்றோர். அப்படி எரிந்துக் கருகிய மனதில் மரணம் முட்டி மிஞ்சியச் சாம்பலில்கூட பொறாமை நீருபூத்து சுடும் நெருப்பாகவே கனன்று பிறரின் நல்லெண்ணங்களைக்கூட எரிக்கத்தக்க கடுந் தீஞ்செயலாகவே மாறிவிடுகிறது.

அதேவேளை பொறாமையற்றோரைப் பாருங்களேன்; பொறாமையில்லா மனசு ஒரு பூஞ்சோலை மாதிரி. அங்கே அன்பின் காற்று சில்லென்று வீசும், பெருந்தன்மையின் கடலென அவரின் மனசு விரிந்திருக்கும், கேட்டதைக் கொடுக்க இயலாவிட்டாலும் அவரால் நினைத்ததை செய்து தரமுடிகிறது. அவருக்கென மரங்கள் தனியே அசைகின்றன. சுடும் சூரியன்கூட கொஞ்சம் ஒதுங்கி மேகத்துனுள் மறைந்துக்கொண்டு அத்தகையோரை சுடக்கூட அஞ்சுகிறது. தெளிந்த நீரோடையில் தெரியும் சிறுகல் மற்றும் மணலைப்போல, வெள்ளெந்தியாய், பார்ப்பவருக்க்கு அவரின் முகத்தைக் காட்டும் கண்ணாடியைப் போல சுத்தப்பட்டுவிடுகிறது பொறாமையில்லா மனசு.

உண்மையில் பொறாமையின்றி வாழ்வது எத்தனை இனிமை தெரியுமா? போகட்டுமே’ அவள்தானே…

View original post 885 more words

7 thoughts on “வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரை – 11 – பொறாமை)

  1. வாழ்த்துக்கள் மணிகண்டன்.. நல்லதைச் செய்வதும் பகிர்வதும் வாழ்வை நிமிரச் செய்யுமென்று நம்புவோம்.. நன்றியும் வணக்கமும்..

  2. நல்ல பகிர்வு மணீகண்டன் கோபம் போன்றே பொறாமையும் கண்டிப்பாக தவிர்க்க்ப் பட வேண்டிய ஒன்று அழகாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  3. திரு வித்யாசாகரின் பதிவை நீங்கள் மீள்பதிவு செய்தது ரொம்ப நல்ல காரியம். அவரது எழுத்துக்கள் பலரையும் சென்று அடைய வேண்டும்.

    உங்களுக்கும் திரு வித்யாசாகருக்கும் பாராட்டுக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s