பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை வளர்க்காதீர்கள்… வளரவிடுங்கள்!’

vidhai2virutcham-விதை2விருட்சம்

குழந்தைகளிடம் பெற்றோர் எப்படிப் பழக வேண்டும்:

‘குழந்தை வளர்ப்பு, ஒரு கலை மட்டுமல்ல… அறிவியலும்கூட!’ (Parenting is not only an art, it is also a science)என்பதுண்டு! அதற்காக, ‘அறிவியல் பூர்வமாக வளர்க்கிறேன் பேர்வழி’ என்று எத ற்கெடுத்தாலும் டாக்டரைத் தேடி ஓடுவது… நிபுணர்களிடம் போய் க்யூ கட்டி நிற்பது… என்று ஆட ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். ஆனால், குழந்தையை நாம் வளர்க்க வேண் டியது இல்லை என்பதுதான் உண்மை. இதற் காகவேதான் சமீபகாலங்களாக ‘குழந்தைக ளை வளர்க்காதீர்கள்… வளரவிடுங்கள்!’ என சத்தமாகக் கூற ஆரம்பித்துள்ளனர் உலகெங்கும் உள்ள

View original post 1,765 more words

நீங்கள் வீட்டுக் கடன் வாங்க வங்கியை அணுகும் போது . . .

vidhai2virutcham-விதை2விருட்சம்

நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜ மாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன் று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார் கள்!  

எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறு ப்புடன் பயன் படுத்த வேண்டாமா?  
 
தனிநபர் ஒருவர் வாங்கும் பெரிய கடன் என்றால், அது வீட்டுக் கடன் தான். ஆகவே,

View original post 776 more words

மணிவண்ணன்…..

கோவையில் பெரிய அரிசி வியாபாரியும் அரசியல்வாதியுமான டிஎஸ் மணியத்தின் மகனாகப் பிறந்த மணிவண்ணன், கோவையில் பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தார். படிக்கும்போதே அவர் பார்த்த படம் கிழக்கே போகும் ரயில். அந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பில், இயக்குநர் பாரதிராஜாவுக்கு 16 பக்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதினாராம் மணிவண்ணன். அதைப் படித்துவிட்டுத்தான், மணிவண்ணனை தன்னுடன் சேர்த்துக் கொண்டாராம் பாரதிராஜா.

பாரதிராஜாவுக்கு மணிவண்ணன் சொன்ன முதல் கதையே பிடித்துப் போய்விட்டது. இதையே படமாக்கலாம் என முடிவெடுத்து அதற்கு நிழல்கள் என்று பெயரிட்டனர். இளையராஜா இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் எழுதினார் மணிவண்ணன். வாலி வருவதற்கு தாமதமானதால், மணிவண்ணனையே எழுத வைத்தாராம் ராஜா. அதுதான் ‘மடை திறந்து…’ பாடல். இந்தப் பாடலை எழுதி முடித்த பிறகு வாலி வந்திருக்கிறார். அதற்குள் பாதிப் பாடலை மணிவண்ணன் எழுதிவிட்டாராம். ஆனாலும் வாலி பெயரிலேயே அந்தப் பாடல் வரட்டும் என்று கூறியிருக்கிறார்.

கதை – வசனம் எழுதிய முதல் படமே தோல்வி. ஆனால் பாரதிராஜா, இதே மணிவண்ணனை வைத்து ஒரு வெற்றிப் படம் தருவேன் என்று நண்பர்களிடம் சவால்விட, அந்த சவாலில் ஜெயிக்க மணிவண்ணன் உருவாக்கிய கதைதான் அலைகள் ஓய்வதில்லை. அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவை கார்த்திக் வர்ணிக்கும் ஒரு காட்சியில் மணிவண்ணன் வசனங்கள் அத்தனை அழகாக அமைந்திருக்கும். காதல் ஓவியம் படத்துக்கும் மணிவண்ணன்தான் கதை வசனம். பாக்யராஜுக்குப் பிறகு, பாரதிராஜாவுக்கு பிடித்த வசனகர்த்தாவாக மணிவண்ணன் திகழ்ந்தார்.
மணிவண்ணன் இயக்கிய முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. இந்தப் படத்துக்கு இயக்குநராக அவரை சிபாரிசு செய்தவர் இளையராஜா. கதை ரொம்பவே வித்தியாசமானது. இந்த முதல் படத்திலேயே தான் மக்களுக்காக கலைஞன் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பார் மணிவண்ணன்.

மணிவண்ணனை சிகரத்தில் வைத்த படம் என்றால் அது நூறாவது நாள். மிகச் சொற்ப பட்ஜெட்டில், மிகக் குறைந்த நாட்களில்… ஜஸ்ட் 12 நாட்களில் இந்தப் படத்தை மணிவண்ணன் எடுத்திருந்தார். இதை அன்றைக்கு இளையராஜாவிடம் சொன்னபோது அவர் நம்பவே முடியவில்லையாம். ‘என்னய்யா சொல்ற.. 12 நாளில் ஒரு படமா… சரி படத்தைக் காட்டு’ என்றாராம். படத்தைப் பார்த்ததும், “பிரமாதம்… அசத்தியிருக்கேய்யா… இதுக்கு நானும் ஏதாவது செய்யணுமே…” என்றவர், இதுவரை எந்தப் படத்துக்கும் போடாத அளவு மிகச் சிறப்பாக பின்னணி இசை அமைத்துக் கொடுத்தாராம். படத்தில் மூன்று பாடல்கள்தான். ‘இந்தப் படத்துல அதிகமா பாட்டு வச்சா, அந்த க்ரிப் குறைஞ்சிடும். இதுவே போதும். பின்னணி இசைதான் இந்தப் படத்துக்கு ஹைலைட்டா இருக்கணும்…’ என்றாராம் இளையராஜா. அந்தப் பின்னணி இசையை இசைத் தட்டிலும், கேசட்டுகளிலும் தனியாக பதிவு செய்து கொடுத்ததெல்லாம் தனிக் கதை.

இவர் இயக்கத்தில் ஒரே நேரத்தில் வெளியான படங்கள் பாலைவன ரோஜாக்கள் மற்றும் விடிஞ்சா கல்யாணம். பாலைவன ரோஜாக்களுக்கு கலைஞர்தான் கதை வசனம். வண்ணப் பட காலகட்டத்தில் கலைஞர் கதை வசனம் எழுதி மிக அழகாகவும் சிறப்பாகவும் வந்த படங்களில் என்றும் முதலிடம் இந்த பாலைவன ரோஜாவுக்குதான். இரண்டுமே நூறு நாட்களுக்கு மேல் ஓடியவை. இரண்டிலுமே சத்யராஜ்தான் ஹீரோ. இதையெல்லாம் இன்றைக்கு யாராலாவது நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

மணிவண்ணன் மிகப் பெரிய வெற்றிப் படம் என்றால் அது அமைதிப்படைதான். தரம், வசூல் என அனைத்திலுமே அந்தப் படம் க்ளாஸ்-ஆக அமைந்துவிட்டது. இந்தப் படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்தனர். அங்கும் வெற்றியைக் குவித்தது அமைதிப்படை.

மணிவண்ணனின் 49வது படம் இது. அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், இயக்குவதிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். ஆனால் நடிகராக அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. 2002ல் மணிவண்ணன் இல்லாத தமிழ்ப் படமே இல்லை எனும் அளவுக்கு எல்லாப் படங்களிலும் காமெடியன், வில்லன், குணச்சித்திர வேடங்கள் என கலக்கினார். ஒரு இயக்குநராக அதிக வெற்றிப் படங்கள் தந்த பெருமை மணிவண்ணனுக்கு உண்டு. அதேபோல ராம நாராயணனுக்குப் பிறகு ஒரு ஆண்டில் அதிக படங்களை இயக்கியவரும் மணிவண்ணன்தான். மணிவண்ணன் இயக்கியுள்ள 50 படங்களில் முக்கால்வாசி இளையராஜா இசையமைத்தவைதான். இவர் படங்களில் பாடல்கள் பெரும்பாலும் சிறப்பாக இருக்கும்.

அமைதிப் படை 2-க்குப் பிறகு, தாலாட்டு மச்சி தாலாட்டு என்ற படத்தை இயக்குவதாக அறிவித்திருந்த மணிவண்ணன், அடுத்து நூறாவது நாளின் இரண்டாம் பாகம், மற்றும் சத்யராஜுன் இணைந்து பணம் படுத்தும் பாடு ஆகிய படங்களை இயக்கத் திட்டமிட்டிருந்தார். அனைத்துக்கும் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். காரணம் அமைதிப்படை 2 கொடுத்த லாபம் அப்படி. அமைதிப்படை 2 ன் தொலைக்காட்சி உரிமையே ரூ 3.5 கோடிக்கு போனதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவருக்கும் தெரியும். கிட்டத்தட்ட 450 படங்களில் நடித்தார். ரஜினியுடன் தொடர்ந்து பெரிய படங்கள் பலவற்றிலும் நடித்தார். கடைசியாக சிவாஜியில் ரஜினியின் தந்தையாக நடித்தார். சினிமாவைத் தாண்டி இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். மணிவண்ணன் மகள் திருமணத்தையே ரஜினிதான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

மணிவண்ணனுக்கு நிகராக ஒரு திரைக்கலைஞர்… வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு பன்முகக் கலைஞராகத் திகழ்ந்தவர் மணி. அவரிடமிருந்து உருவான விக்ரமன், சுந்தர் சி, சீமான், பிரபு சாலமன், ராசு மதுரவன் என அத்தனை இயக்குநர்களும் வெற்றிகரமான இயக்குநர்களாகத் திகழ்கின்றனர்.
தமிழ் சினிமாவில் இயக்குநராக வேண்டுமென்றால் ஒரு முறையாவது மணிவண்ணனுடன் பணியாற்ற வேண்டும் என்பார் இயக்குநர் விக்ரமன். இனி இப்படியொரு மகத்தான மக்கள் கலைஞனுக்கு எங்கே போவது!!படம்

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட “மீண்டெழும் பாண்டியர் வரலாறு

படம்
————————————————————————————————————–

“நூலை எழுதிய ‘மள்ளர் மீட்புக் களம் ‘ தலைவர் .செந்தில் மள்ளர்
—————————————————————————————————-
செய்த குற்றம் என்ன ?
————————————-

தமிழர்களுக்கு இதுவரை உண்மையான வரலாறு எழுதப்படவில்லை என்பது உண்மையான வரலாற்று அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று.
இதுவரை தமிழர்களின் வரலாற்றை தமிழரல்லாதோரே எழுதியுள்ளனர். அவர்களால் தமிழர்களின் உண்மையான வரலாற்றின் செயற்களத்தை “இருண்டகாலம் ” என்ற ஒற்றைசொல்லில் முடக்கி மறைக்கப்பட்டது. இவைகள் தொடர்கதையாகிவரும் இன்றைய சூழலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் தமிழர்களின் விடியலாய் உதித்த பாவாணரின் வழியில் “மீண்டெழும் பாண்டியர் வரலாறு ” எனும் தமிழர்களுக்கான ஆய்வு நூலை எழுதியதற்காக அந்நூல் தற்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்டதுடன் அதனை ஆக்கிய நூலாசிரியர் தோழர் .செந்தில் மள்ளரை கைது செய்யவும் காவல்துறை முனைந்து உள்ளது.கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே ஜனநாயகப் பண்பு. அதைவிடுத்து இத்தகைய கைது நடவடிக்கை என்பது ஒரு பள்ளனோ ,ஒரு பறையனோ தமிழர் வரலாற்றை எழுத கூடாது என்ற புதிய அரசியல் தீண்டாமை தமிழர் ஓர்மைக்கு முரணாக அமையும்.
மள்ளர் மீட்புக்களம் எனும் சமுதாய மீட்சி இயக்கத்தினை நடத்துவதுடன், அனைத்து தமிழ் சமூகத்திடமும் நல்லிணக்கத்தை வளப்படுத்த “தமிழ்ச் சமூகங்களின் கூட்டமைப்பு ” எனும் கூட்டியக்கத்தினை தோழர்.செந்தில் மள்ளர் நடத்திவருகிறார்.மேலும் தமிழ்தேசிய சிந்தனை மக்களிடம் சென்று சேர “மண்ணுரிமை ” எனும் மாத இதழ் மூலம் விழிப்புணர்வை ஊட்டிவருகிறார்
.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முள்ளி வாய்க்காலில் தமிழர்களை கொன்றுகுவித்த காங்கிரஸ் தென்மாவட்டத்தில் ஒருதொகுதியில் கூட வெற்றிபெற கூடாது என தீவிர பரப்புரையை காங்கிரஸ் க்கு எதிராக மேற்கொண்டார். தமிழ் தேசிய இயக்கங்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்துள்ளார்.மேலும் 2009-ல் மாவீரன் முத்துகுமாரின் ஈகத்தை தொடர்ந்து 2010-ல் முத்துகுமார் உள்ளிட்ட 19 ஈகியர்களின் நினைவை போற்றும் விதமாக “மாவீரன் முத்துகுமார் நினைவேந்தல் ஒருங்கிணைப்புக் குழு ” சார்பில் முன்னெடுக்கப்பட்ட “ஈகியர் சுடர் பயணத்தை ” கன்னியாகுமரியில் இருந்து சென்னை கொளத்தூர் வரை சுடர்பயணம் மேற்கொண்டார்.2011-லும் மூன்று வழித்தடங்களில் ஒன்றாக சுடர்பயணம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டை தமிழர்களே ஆளவேண்டும் என்பதை வலியுறித்தி சென்ற ஆண்டு “திராவிடனே வெளியேறு இயக்கம் ” என்ற இயக்கத்தினை தொடக்கி ,திராவிடர்கள் அரசியலில் இருந்து அவர்களாகவே வெளியேற வேண்டும் என வலியுறித்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு பல்வேறு தளங்களில் தமிழ்,தமிழ்தேசியம்,திராவிட எதிர்ப்பு,சமூக முன்னேற்றம் என செயப்பாட்டு வருவதுடன் தமிழர்களின் உண்மையான வரலாற்றினை எழுதவேண்டும் என்ற முனைப்பில் எழுதப்பட்டதே “மீண்டெழும் பாண்டியர் வரலாறு” இதனை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற அவாவில் 10 ஆண்டுகால உழைப்பின் உண்மையை கொண்டுசெல்ல முனைந்து சாத்தூரில் நூல்வேளியிட்டு விழாவினை நடத்த முனைந்த வேளையில் தமிழக காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது.
நீதிமன்றத்தை நாடி மதுரையில் நடத்த முனைந்த வேளையில் ,
இன்று தமிழரல்லாதோரின் கூட்டுமுயற்சியால் தடைசெய்யப்பட்டுள்ளது.தமிழர் வரலாற்றை தமிழன் எழுதகூடாது என மறைமுகமாக வந்தேறிகளால் போர்தொடுக்கப்பட்டுள்ளது.தமிழர்களே வீணர்களின் முயற்சியை முறியடிக்க குரல்கொடுங்கள்.ஒன்று கூடுங்கள்.
ஏ.எழிலமுதன்.

கேன்டீன், கழிப்பறை வசதியுடன் நவீன கிளாசிக் பஸ் இயக்கம் : ஜெ தொடங்கி வைத்தார்

சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக கேன்டீன், கழிப்பறை வசதி கொண்ட நவீன கிளாசிக் பஸ், சென்னை – ஸ்ரீரங்கம் இடையே இயக்கப்படுகிறது. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட 189 பஸ்கள், புதுப்பிக்கப்பட்ட 55 பஸ்கள், மகளிர் ஸ்பெஷல் பஸ்களை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் ரூ.1.28 கோடி மதிப்பில் பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கு புதிய சி.டி.ஸ்கேன், 54 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு புதிய ஜீப்புகள், திருச்சி கிழக்கு, நாமக்கல் தெற்கு, பூந்தமல்லி உள்ளிட்ட புதிய 5 வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
சென்னை – ஸ்ரீரங்கம் இடையே நவீன வசதிகளுடன் கூடிய கிளாசிக் பஸ் விடப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் கேண்டின், கழிப்பறை வசதிகள் உள்ளன. கிளாசிக் பஸ் சர்வீஸை தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா, அதில் ஏறி நவீன வசதிகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் கேண்டின் மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்ரீரங்கத்தில் இருந்து தினமும் காலை 9 மணி மற்றும் இரவு 10 மணிக்கு 2 சர்வீஸ்களாக சென்னைக்கு இயக்கப்படும். மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து காலை 9 மணி, இரவு 10 மணிக்கு ஸ்ரீரங்கத்துக்கு புறப்படும். சொகுசு பஸ்சில் காலை நேரத்தில் பயணிகளுக்கு இட்லி, பொங்கல், ஊத்தப்பம் வழங்கப்படும். 3 இட்லி ரூ.15-க்கும், பொங்கல், ஊத்தப்பம் ரூ.15-க்கும், மதியம் சாம்பார் சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் தலா ரூ.20க்கும் வழங்கப்படும். இரவு நேரத்திலும் உணவு வழங்கப்படும்.
மேலும் 5 ரூபாய்க்கு 50 கிராம் மிக்சர், 5 ரூபாய்க்கு பிஸ்கெட் பாக்கெட், 5 ரூபாய்க்கு டீ அல்லது காபி கிடைக்கும். ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10-க்கு பஸ்சிலேயே விற்கப்படும். பஸ்சின் இருக்கைகள் பயணிகளுக்கு ஏற்றார் போல சொகுசாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் படிப்படியாக இதுபோன்ற பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.