தொலை பேசி கட்டணம்

வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது.

அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார் இதற்கு காரணம்?

அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது.

மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்ளாக்பெரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாதுப்பா.

நாம யாரும் உபயோக படுத்தலைன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க.

அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான், உங்களை மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். என்ன தப்பு…?

சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்லை, வேறொருவர் நமக்கு அதை செய்யும் வரை…

உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜப்பான் நாட்டில் ஒரு பெண் ரயிலில் இருந்து இறங்கும் போது பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.சக பயனிகள் உடனடியாக ரயிலை மறு பக்கம் சாய்த்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.அந்த பெண்ணுக்கு சிறு… காயம் கூட ஏற்படவில்லையாம்.

இதுவே நம்மூரில் ரோட்டில் யாராவது அடிபட்டு கிடந்தால் அல்லது ஷாப்பிங் காம்ப்ளாக்ஸில் இருந்து கீழே விழுந்தால் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்.

காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் தான் 32 டன் எடை கொண்ட ரயிலை வெறும் 100 பேர் சேர்ந்து சாய்த்து காப்பாற்றியுள்ளனர்.

உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள் அவர்கள்.

66125_645373088814075_721442598_n

தத்துவம் உயிரைக் காப்பாத்தாது…

1001212_635354013149519_1828861155_n
ஒரு தத்துவ ஞானி ஆற்றைக் கடப்பதற்காகப் படகில் ஏறினார். படகுக்காரனைப் பார்த்து,”உனக்குப் பூகோளம் தெரீயுமா?” என்று கேட்டார்.

“எனக்குப் படகு ஓட்டத்தான் தெரியும் –

பூகோளம் எல்லாம் தெரியாது” என்றான் படகுக்காரன்.

வாழ்க்கை ஒரு ரூபாய் என்றால்,

அதில் கால் ரூபாயை நீ இழந்துவிட்டதாக அர்த்தம்

என்றார் தத்துவ ஞானி.

சற்றுத் துரம் போனவுடன்,

“சரித்திரம் தெரியுமா” என்று கேட்டார்.

” அதுவும் எனக்குத் தெரியாது” என்றான் படகுக்காரன்.

“அரை ரூபாயை இழந்துவிட்டாய்” என்றார் அவர்.

பிறகு அவனைப் பார்த்து,

“விஞ்ஞானம் தெரியுமா?” எனக் கேட்டார்.

“அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது அய்யா,

எனக்கு படகு ஓட்ட மட்டும் தான் தெரியும்”

என்றான் படகுக்காரன்.

“முக்கால் ரூபாயை இழந்துவிட்டாய்” என்றார் அவர்.

அப்பொழுது திடீரென்று ஆற்றில் சுழல் ஏற்பட்டு படகு கவிழும் நிலை ஏற்பட்டது..

“சாமி,

உங்களுக்கு நீந்தத் தெரியுமா?” என்று

படகுக்காரன் கேட்டான்.

“தெரியாது” என்றார் அந்த தத்துவ ஞானி .

“இப்பொழுது முழு ரூபாயையும் அல்லவா நீங்கள்,

இழக்கப் போகிறீர்கள்”,

எனக் கூறிய படகுக்காரன் நீரில் குதித்து கரை சேர்ந்தான்.

தத்துவஞானியோ நீச்சல் தெரியாததால்

நீரில் மூழ்கி உயிர் துறந்தார்..

-உடுமலை.சு.தண்டபாணி
முகநூல்

தமிழ்நாட்டிலே அதிசய பள்ளிகூடம்

பள்ளி மாணவர்களுக்கு வேட்டி சட்டை …. சீருடை !

” மதுரையில் .. டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை…. வேட்டி சட்டை தான் !

இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது.

அந்தப் பள்ளியின் மாணவர்கள். சாலையில் அணி அணியாக நடந்து வந்தால், ஏதோ அரசியல் கட்சி ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ கிடையாது.

கதர் வேட்டிதான்.

வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.

பள்ளியில் ஆசிரியைகளை ‘அக்கா’ என்றும்,
ஆசிரியர்களை ‘ஐயா’ – என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் மாணவ- மாணவிகள்.
தலைமை ஆசிரியருக்கும் விதிவிலக்கு கிடையாது.

வகுப்பு மாணவர்கள் வேட்டி அணிவதைப்போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள்.

சிறு குழந்தைகளும்கூட வாரத்தில் மூன்று நாட்கள் கதர் ஆடை மட்டுமே அணிகிறார்கள்.

திங்கள் கிழமை தோறும் நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை மாணவர்கள் பாடுவார்கள்.

புதன்தோறும் நடைபெறும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பைபிள், பகவத் கீதை, குர்ஆன், திருக்குறளையும் சேர்த்து வாசிப்பார்கள்.

ஒழுக்கத்துக்குப் பேர் போன பள்ளி இது.

காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின்போது மாணவர்களை கண்காணிக்கவே தேவை இல்லை.
காப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிப்பார்கள்.

நன்றி
தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு
முகநூல்

புறநானூறு

நண்பர் ( அலுவலகத்தில் என் ஜூனியர் ) ஒருவருடன் ஒரு உரையாடலின் போது – வெளிநாட்டு வாய்ப்பை எதிர்பார்த்திருந்த போதிலும் , புது இடம் , புது மனிதர்கள் என்கிற தயக்கம் அவன் பேச்சில் இருந்தது ..உடனே நான் “விடுய்யா …இந்த வயசு ல யாதும் ஊரே யாவரும் கேளிர் .. னு போக வேண்டியது தானே ..” என்று கூறி முடித்தேன் … உடனே அவன் “என்னாங்க சினிமா டயலாக் லாம் விடுறீங்க ” என்று கூறினான் …. மேற்கொண்டு நான் ஏதும் பேசவில்லை ………
சினிமா டயலாக் என்று சொல்பவனிடம் கணியன் பூங்குன்றனார் என்று கூறியிருந்தால் , பதில் இது யாரு?.. 23ம் புலிகேசி படத்துல வில்லன் பெயரா என்று சொல்லியிருப்பான்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர் ..அன்பே எங்கள் உலக தத்துவம் ” – இப்படி ஆரம்பிக்கும் ஒரு தமிழ் திரைபட பாடல் உண்டு

“தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன்மொழியே நம் பொன் மொழியாம் ” – கருணாநிதி எழுதி ரஹ்மான் இசை அமைத்த செம்மொழி பாடலில் இப்படி ஒரு வரி வரும் ..

இந்த இரண்டு வரிகளுமே தெய்வத்திரு.கனியன் பூங்குன்றனார் எழுதிய புறநானூறு பாடலின் முதல் இரண்டு வரிகள் ….
அநேகம் தமிழருக்கு இது தெரிந்திருக்கும் ..சிலருக்கு முதல் இரண்டு வரி மட்டும் தெரிந்திருக்கும் … தெரியாதவர் க்கு நமக்கு தெரிந்ததை சொல்லலாம் என்று எண்ணி இந்த பதிவு ….
ராஜகோபாலனுக்கு என்னாயிற்று ? முதலில் குறுந்தொகை , இப்பொழுது புறநானூறு …தமிழ் வெள்ளம் பெருக்கெடுக்கிரதா என்கிற கேள்வி எழும் … வெள்ளம் எடுக்க ஊற்று வேண்டும் ..இங்கு இருப்பதோ சிறு துளிகளே – அதையும் பங்கு போடலாம் என்கிற எண்ணமே …
என் தந்தை வேலை நிமித்தம் காரணமாக நான் பள்ளியில் தமிழ் படித்ததே இல்லை (இன்று வரை வருந்தும் விடயம் அது ஒன்று ) – ஒரு உந்துதலில் தமிழ் படிக்க பயில ஆரம்பித்தேன் ..அதனாலகூட படித்தவர்களுக்கு மறந்தது , எனக்கு மறக்காமல் இருக்கலாம் … கடந்த பதிவில் சொன்னது போல , எனக்கு பிடித்த/ தெரிந்த சங்க கால பாடல்களை பற்றி வரும் பதிவுகளில் இயன்ற அளவு பகிர்கிறேன் ..

முதலில் புறநானூறு என்றால் என்ன ? புறநானூறு சங்க காலத்தை சேர்ந்த ஒரு தொகை நூல் ..அதாவது பல பாடல்கள் கொண்ட ஒரு தொகுப்பு …குறுந்தொகை , புறநானூறு இவ்விரண்டையும் சேர்த்து மொத்தம் எட்டு தொகுப்புகள் உள்ளன , இவைகளை எட்டுத்தொகை என்பர். இதல்லாமல் பத்து நீண்ட பாடல்கள் உள்ளன – அவைகளை பத்துபாடல் என்பர் . இவை இரண்டையும் சேர்த்து மொத்தம் 2381 பாடல்கள் உள்ளன ( 3 வரியிலிருந்து 782 வரி வரை நீளமுள்ளவை ) ..உலகில் எந்த இலக்கியத்திலும் இம்மாதிரியான தொகுப்புகள் இல்லை என்பது நம் பெருமை கணக்கில் இன்னொன்று.
எப்படி பிரித்தார்கள் , ஒவ்வொன்றிலும் இருப்பது என்ன என்பதே பெரிய வரலாறு !

எடுத்து கொண்ட புறநானூறு பற்றி சொன்னால் — இது பல புலவர்கள் பாடின நானூறு பாடல்களின் தொகுப்பு ..
புறம் -> அதாவது காதல் தவிர்த்து ,வெளி உலகம் சார்ந்த விடயங்கள் பற்றி …உதாரணத்துக்கு வீரம் , போர் , நற்குணங்கள் இப்படி போகும் பாடல்கள் …

இப்பொழுது நம் எடுத்து கொண்ட பாடலுக்கு வருவோம் …. நாம் எப்படி வாழ்ந்தோம் ..எப்படி வாழ வேண்டும் ..என்று சொல்வதில் பாரதியாரின் வேடிக்கை மனிதர்கள் , மனதில் உறுதி வேண்டும் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது …. ஒரு அற்புதமான பாடல் …. இதோ உங்கள் பார்வைக்கு பொருளுடன் … ஒவ்வொரு வரி முடிய ஒரு குறியீடு கொடுத்துள்ளேன் – அதை வைத்தே அந்த வரிக்கான பொருளை தெரிந்து கொள்ளலாம்

பாடியவர் —- தெய்வத்திரு . கணியன் பூங்குன்றனார்

பாடல்
~~~~~~~

யாதும் ஊரே ; யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ;
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே ;
முனிவின் இன்னாது என்றலும் இலமே ;
மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர் வழிப்படூ ஊம் புணை போல் ஆர் உயிர் முறை வழிப்படூஉம் என்பது திறவோர் – காட்சியின் தெளிந்தனம் ஆகலின் , மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே ;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ;

பொருள்
~~~~~~~~~
எல்லா ஊரும் எங்கள் ஊர் ; எல்லோரும் உறவினர் ;
நல்லதும் கெட்டதும் பிறர் கொடுத்து வருவதில்லை ;
அதுபோலதான் வருத்தமும் சாந்தமும் ;
மரணம் புதியதல்ல ;
வாழ்க்கை இனிது என்று அதிகம் சந்தோஷப்படுவதில்லை ;
கோபத்தினால் வெறுப்புமில்லை ;
மின்னல் மின்னி மழை பெய்து கற்களில் உருண்டு செல்லும் ஆற்றுவெள்ளம் போல வாழக்கை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டோம் அதனால் பெரியவர்களை பார்த்து வியப்படைய மாட்டோம் ;
அதைவிட சிறியவர்களை இகழ்வாய் பேச மாட்டோம் .

…… தமிழாக்கம் தெய்வத்திரு. சுஜாதா ரங்கராஜன் ( புறநானூறு ஒரு எளிய அறிமுகம்)..
பள்ளியில் தமிழ் படிக்காத எனக்கு நிறைய ஆசான்கள் -கண்ணதாசன் , வாலி , வைரமுத்து , சுஜாதா , பால குமாரன் , கல்கி …..இப்படி ..
அந்த வரிசையில் தெய்வத்திரு.சுஜாதா அவர்களின் பங்கு பெரியது … நடைமுறை தமிழையும் சொல்லி கொடுத்த அதே சமயத்தில் சங்க காலத்துடனும் என்னை அறிமுகம் செய்து வைத்தார் … விருப்பமுள்ளவர்கள் அவரின் சங்க கால மொழி பெயர்ப்புகளை வாங்கி படியுங்கள்.

இறுதியாக ஒரு சொல் — இப்படி கடினமான பாடல்களை படித்து என்னா ஆக போகிறது என்கிற கேள்வி எழுபவர்களுக்கு என்னுடைய பதில் இரண்டு (1) உங்களை மனப்பாடம் செய்ய -சொல்லவில்லை .. பொருளை உணர்ந்தாலே மெய் சிலிர்க்கும் (2) பொருளை உணர்ந்தால் நாம் முன்பு எப்படி இருந்தோம் இப்பொழுது எப்படி இருக்கிறோம் என்று தெரியும் – அது உரைத்து விட்டால் புது புத்துணர்ச்சி பிறக்கும்.

வாழ்க தமிழ் .

ரா.ராஜகோபாலன்

நன்றி

முகநூல்

வாய்ப்புண் பற்றிய தகவல்களும், வீட்டு வைத்தியமும்

Aphtha

Aphtha (Photo credit: Wikipedia)

வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.

யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?
பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.

ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம். உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுகின்றது

காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.

பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.

இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.

உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.

பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.

English: Aphthous ulcer in the back of the mouth

English: Aphthous ulcer in the back of the mouth (Photo credit: Wikipedia)

மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.

வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?

வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.

தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.

தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.

மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.

மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.

தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

முந்திரிக்கொட்டை

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,

“உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது.

மூவருக்கும் ஆச்சரியம்!

உடனே கேஷியர் முந்திக்கொண்டு,

“நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார்.

பூதமும் “அவ்வாறே நடக்கட்டும்” என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…

“அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்” என்றார்.

அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர்,

“நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?” என்றது பூதம்.

அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,

“ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!”

=== நீதி : உயர் அதிகாரிகளின் முன் நாம் முந்திரிக்கொட்டையாக இருக்கக்கூடாது!

சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?